சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு குறைந்தது

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரி
பூண்டி ஏரி
Published on: 
Summary

பூண்டி ஏரியில் இருந்து, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாயில் நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான பூண்டி செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகும். இதில் தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டிக்கு வந்தடையும்.

பூண்டி ஏரி

இந்த நீர் கடந்த செப்டம்பர் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பூண்டி ஏரியின் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 490 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

எனவே பூண்டி ஏரியில் இருந்து, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாயில் நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு விநாடிக்கு 16 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,415 மில்லியன் கன அடியும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,497 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருக்கிறது.

இதனால், தற்போதைக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com