வீராணம் ஏரி நீர்மட்டம் 45.50 அடியாக உயர்வு

வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
வீராணம் ஏரி
வீராணம் ஏரி
Published on: 
Summary

விவசாயப் பாசனத்திற்கு மட்டுமின்றி, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் வீராணம் ஏரி முக்கியப் பங்காற்றி வருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது.

வீராணம் ஏரி

கடந்த சில தினங்களாகவே கடலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது வந்தது. நேற்று காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, வீராணம் ஏரிக்கு வடவாறு மூலம் 1,250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணை

இதுதவிர செங்கால் ஓடை, பாப்பாகுடி ஓடை, நல்லதங்காள் ஓடை, ஆண்டிபாளையம் ஓடை மூலமாகவும் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது.

நீர்மட்டம் உயர்வு

இந்த ஏரியின் மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடிபாசன வசதி பெறுகின்றன. மேலும், மறைமுகமாக 1 லட்சம் ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

விவசாயப் பாசனத்திற்கு மட்டுமின்றி, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் வீராணம் ஏரி முக்கியப் பங்காற்றி வருகிறது.

கண்காணிப்பு

தற்போது வடகிழக்கு பருவமழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகப்படியாக வருவதால், ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீர் மட்டம் 46 அடிக்கு மிகாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு ஓடைகள் வழியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 70 கன அடி தண்ணீர் சென்னை குடிநீருக்காகவும், 170 கன அடி தண்ணீர் விவசாய பாசனத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com