செங்கல்பட்டு மாவட்டத்தில் 628 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Vinayagar
Published on

விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுஇடங்களில் பொதுமக்கள், இந்து அமைப்பினர் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்தனர். இந்த சிலைகள் கடல், ஏரிகள், குளங்களில் கரைக்கப்பட உள்ளன.

வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மொத்தம் 628 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு மேற்பார்வையில், 7 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 25 காவல் ஆய்வாளர்களுடன் மொத்தம் 790 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் அரசின் வழி காட்டி நெரிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com