விஜயகாந்த் பிறந்தநாள்- புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
விஜயகாந்த் பிறந்தநாள்- புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
Published on

சென்னை:

தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-

'வானத்தைப் போல' பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்று 'புலன் விசாரணை' செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக 'கேப்டனாக' மரியாதையுடன், நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com