விஜய் ரொம்ப புத்திசாலி- நமீதா

விஜய் அரசியலுக்கு வந்தற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம்.
விஜய் ரொம்ப புத்திசாலி- நமீதா
Published on

அவினாசி:

நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க., 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். தி.மு.க., மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com