வெற்றி பயணத்திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க கூடிய சூழலில் அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
Vetri Payanam Thittam
Published on: 

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய வெற்றி பயணத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விடியல் பயணத்திட்டமாக இருந்தது, இப்போது தவெக அரசு பொறுப்பேற்றவுடன், அது வெற்றி பயணத்திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

வெற்றி பயணத்திட்டம் விரிவாக்கம்

முந்தைய திமுக ஆட்சியில் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க 'மகளிர் விடியல் பயணம்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் இத்திட்டம் ‘வெற்றிப் பயணம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அக்டோபர் 2, 2026 அன்று விரிவாக்கம் செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இந்த விரிவாக்க திட்டத்தின் படி மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் , டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய்லாம் என்று தெரிவிக்கப்பட்ட்து

இந்த புதிய அறிவிப்பால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க கூடிய சூழலில் அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர்.

திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளார் வழக்கு

வெற்றி பயண திட்டத்தால் தனியார் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக ஈரோட்டை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவைச் சேர்ந்த என். கலாமணி என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் வெற்றி பயணம் திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து தொழிலை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

ஈரோடு முதல் வெள்ளித்திருப்பூர் வரையிலான 47 கி.மீ வழித்தடம் மற்றும் காக்கப்பாளையம் முதல் அந்தியூர் வரையிலான 88 கி.மீ வழித்தடத்தில் பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து நிறுவனத்தில் சுமார் 15 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் குடும்பங்களும் இந்தத் தொழிலையே நம்பியுள்ளார்கள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு கோரிக்கையை ஏற்கவில்லை

வெற்றி பயணத்திட்ட பயனாளிகளின் கட்டணமாக ஆண்டுக்கு 6ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஏற்று கொண்ட நிலையில் இது போல இழப்பீடு வழங்கி தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த திட்டத்தை அரசிற்கு எதிரானது என்றும், மனு மீதான இறுதி தீர்ப்பு வரும் வரை இத்திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் ம்னுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com