

தமிழகத்தில் மாநகரப் பகுதிகளில் சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகிறார்கள். தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
அதன்படி சட்டசபையில் 110-ன் விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து இந்த திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் ஏ.சி. பேருந்தை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில், மாவட்டங்களுக்கு இடையில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அதன் உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதனால் நாங்களும் பெண்களை ஏற்றி செல்கிறோம். அதற்கான மானியங்களை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்துகின்றனர். மேலும், இன்று நள்ளிரவு 12 மணி முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.