தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன்..!- மு.க.ஸ்டாலின்

மானம்தான் பெரிதென வாழ்ந்து, அந்நியர் ஆட்சிக்கு எதிரான கனலை மக்கள் மனதில் விதைத்த அவரது வீரத்துக்குத் தலைவணங்குகிறேன்.
DMK Leader MK Stalin
Published on: 

மானம்தான் பெரிதென வாழ்ந்து, அந்நியர் ஆட்சிக்கு எதிரான கனலை மக்கள் மனதில் விதைத்த அவரது வீரத்துக்குத் தலைவணங்குகிறேன்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

தூக்குமேடைக்கு நடந்து செல்லும்போதும் துணிச்சலோடும் கர்வத்தோடும் சென்ற விடுதலைப் போராளி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள்!

மானம்தான் பெரிதென வாழ்ந்து, அந்நியர் ஆட்சிக்கு எதிரான கனலை மக்கள் மனதில் விதைத்த அவரது வீரத்துக்குத் தலைவணங்குகிறேன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு நமது திராவிட மாடல் அரசில் சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச் சிலை அமைத்ததுடன், மதுரையில் திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்துக்கும் அவரது பெயரைச் சூட்டிப் பெருமை கொண்டோம்!

தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com