

வீராணம் ஏரியின் மொத்தம் நீர்மட்டம் 47.5 அடியாகும். தற்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.05 அடியாக உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியில் இருந்து 24 மதகுகள் மூலமாக விவசாயத்திற்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 14 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற்று வருகிறது.
மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 73 கனஅடி தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த கோடை காலத்தில் நீர்வரத்து குறைந்து ஏரியிலும் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் இருந்து வடவாறு வழியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது வீராணம் ஏரிக்கு வடவாறு மூலம் கொள்ளிடம் கீழணையில் இருந்து 22 கிலோமீட்டர் தூரம் தண்ணீர் வருகிறது. இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
வீராணம் ஏரியின் மொத்தம் நீர்மட்டம் 47.5 அடியாகும். தற்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.05 அடியாக உள்ளது. வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்திற்கு 170 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னைக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.