வாக்கு கேட்டு வரவில்லை, நியாயம் கேட்க வந்துள்ளேன் - தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தாராபுரம் மக்கள் கொடுக்கப்போகும் அடி தவெகவிற்கு மரண அடியாக இருக்க வேண்டும்
mk stalin
Published on: 

தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தாராபுரத்தில் பிரம்மாண்ட ரோடு ஷோ (சாலை வலம்) நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த ரோடு ஷோ நடத்தப்பட்டது .தாராபுரம் அமராவதி சிலையிலிருந்து மு.க.ஸ்டாலின் தனது ரோடு ஷோவை தொடங்கினார்.

ரோடு ஷோ நிறைவடைந்தது, இந்த நிலையில் உடுமலை சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.மக்களிடையே பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது

ஜனநாயகத்தின் வில்லன் முதல்வர்

நான் வாக்கு கேட்டு வரவில்லை நியாயம் கேட்க வந்துள்ளேன் என்று மக்களிடையே உரையை தொடங்கினார். தொடர்ந்து மக்களிடையே பேசிய அவர் ஜனநாயகன் படத்தில் ஹீரோவாக நடித்த முதல்வர் விஜய் தற்போது ஜனநாயகத்தின் வில்லனாக மாறிவிட்டார்.ஆதரவு கேட்பதற்கு கட்சி தலைவர்களின் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் முதல்வர் விஜய் ஷோபா அனுப்பினார். தமிழகத்தை தாண்டி அண்டை மாநிலங்களிலும் பொய் செய்தி பரப்பி வருகிறார்கள்.இதற்கு முன்னர் இப்படி ஒரு இடைத்தேர்தல் நடந்திருக்கிறதா ?

நான்கே மாதத்தில் ஆட்சி நாறிபோய் விட்டது

தவெக ஆட்சியின் ஹனிமூன் பீரியட் முடிந்து நான்கு மாத ஆட்சி நாறிப்போய் விட்டது.நான்கு மாதங்களில் சாதனை என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மக்கள் மத்தியில் நடித்து கொண்டிருக்கிறார் முதல்வர் என்றும் ஆட்சி செய்வது எப்படி என்று கற்றுக்கொள்வார் எனப்பார்த்தால் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கி வருகிறார்.

முதல்வர் பேசவில்லை கத்துகிறார்

எழுதி கொடுத்த வாக்கியத்தை மனப்பாடம் செய்துவிட்டு கத்தி கொண்டிருக்கிறார், கரண்ட் இல்லை, பால் கிடைக்கவில்லை, ரேஷன் கடைகளில் பாமாயில் கிடைக்கவில்லை, அரசாங்கம் செயல்படாமல் கிடக்கும் நிலையில்

வாயை திறங்க ஸ்டாலின் சார் என காட்டுக்கத்தலாக பேசும் முதல்வர் செய்தியாளர்களை சந்திகாதது ஏன் என்று மு.க ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com