உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Madras High Court - Udhayanidhi Stalin
Published on

திமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது

இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை தொடங்கியது.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com