உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

பலியான வீரேந்தர் தி.மு.க.வில் ஊராட்சி இளைஞரணி துணை அமைப்பாளராகவும், வேலன் தகவல் தொழில் நுட்ப அணியில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி  2 பேர் பலி
Published on: 

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்குபேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக நேற்று இரவு பேனர் கட்டும் பணிகள் வெங்கல்அருகே உள்ள வாணியன்சத்திரம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபம் அருகே நடைபெற்றது. இதில் வாணியன்சத்திரம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வீரேந்தர் (வயது 22) , ஆல்பர்ட் (வயது 22), காரணி கிராமத்தை சேர்ந்த வேலன்(30) உள்ளிட்ட ஈடுபட்டனர்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

அவர்கள் பேனரை இரும்பு பிரேமில் பொருத்தி சாலை ஓரம் கட்ட தூக்கினர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அருகே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் பேனரின் இரும்பு கம்பி உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் வீரேந்தர்,வேலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அருகில் நின்று கொண்டு இருந்த ஆல்பர்டும் மின்சாரம் பாய்ந்ததில் உயிருக்கு போராாடினார். இதனை கண்டு அங்கிருந்த தி.மு.க.நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆல்பட்டை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் பலியான வீரேந்தர் தி.மு.க.வில் ஊராட்சி இளைஞரணி துணை அமைப்பாளராகவும், வேலன் தகவல் தொழில் நுட்ப அணியில் ஒருங்கி ணைப்பாளராகவும் இருந்தனர்.

ஆல்பர்ட் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

இறந்துபோன வேலனுக்கு ரம்யா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் மகனும், 1½ வயதில் மகளும் உள்ளனர். இச்சம்ப வம் தி.மு.க.வி னரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X