

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள இன்னர் ரிங்க் ரோடு மற்றும் பேசின் பாலங்களை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. பேசின் பாலத்தை அகலப்படுத்தினால் பயண நேரம் 20 நிமிடத்திலிருந்து 4 நிமிடமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூவம் ஆற்றின் குறுக்கே செல்லும் பாலம் (கிமீ 8/8 இன்னர் ரிங்க் ரோடு ) மற்றும் பேசின் பாலத்தை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனித்தனி டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
முதலமைச்சர் அலுவலகத்துக்கு மனு அளித்ததன் பேரில் பேசின் பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
பேசின் பாலத்தை அகலப்படுத்தினால் பயண நேரம் 20 நிமிடத்திலிருந்து நான்கு நிமிடமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.