

கைதானவர்களுடன் தொடர்பில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜமிஸ்பாபு மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் 3 கிலோ கஞ்சா மற்றும் 3 ஆயிரத்து 630 போதை மாத்திரைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பழனி, பொன்னேரி பகுதியை சார்ந்த மோனிஷ்குமார் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கைதானவர்களுடன் தொடர்பில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.