த.வெ.க. சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது: 26,27-ந்தேதிகளில் சென்னையில் விழா

2-வது கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி 26 மற்றும் 27-ந்தேதிகளில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.
த.வெ.க. சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது:  26,27-ந்தேதிகளில் சென்னையில் விழா
Published on: 
Summary

த.வெ.க. சார்பில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது மற்றும் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி 26, 27-ந்தேதிகளில் சென்னை நீலாங்கரையில் நடைபெறுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்படும்.

த.வெ.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10. 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்டம் மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு கல்வி விருது, உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் கட்ட விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 4-ந்தேதி சென்னையில் நடந்தது.

கல்வி விருது

இதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு உதவித் தொகைகளை வழங்கினார். தற்போது 2-வது கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி 26 மற்றும் 27-ந்தேதிகளில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

26-ந்தேதி நடக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும், 27-ந்தேதி சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கிறார்கள். விழாவுக்கு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பிரத்யேக நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. இதற்கான பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

X