

கவரைப்பேட்டையில் எங்கெல்லாம் மழைநீர் வடி கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது? அவற்றை எப்படி சீரமைப்பது? அதற்கான முயற்சிகள் எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து விஜயகுமார் எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்.
கும்மிடிப்பூண்டி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ. விஜயகுமார். இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் அதிகாரிகளுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அனைத்து சர்வீஸ் சாலை மற்றும் நெடுஞ்சாலை சுற்றியுள்ள மழைநீர் வடி கால்வாய்கள் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் உருவானது. இதனை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கவரைப்பேட்டை சர்வீஸ் சாலை வழியாக எம்.எல்.ஏ விஜயகுமார் நடந்து சென்றபோது, அந்த வழியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. டி.ஜெ. கோவிந்தராஜனை சந்தித்து சிறிது நேரம் அமர்ந்து அவரிடம் பேசினார். மேலும், கவரைப்பேட்டையில் எங்கெல்லாம் மழைநீர் வடி கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது? அவற்றை எப்படி சீரமைப்பது? அதற்கான முயற்சிகள் எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து விஜயகுமார் எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்.
பின்னர் விஜயகுமார் எம்.எல்.ஏ.வும், முன்னாள் எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜனும் சேர்ந்து வடிகால் பணிகளை ஆய்வு செய்தனர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.