மாநில உரிமைகளை எரித்து சாம்பாலாக்கி இருக்கிறது தவெக - திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து கனிமொழி விமர்சனம்

உச்சநீதிமன்ற உத்தரவின் படி கல்தூணில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் முன்னிலையில் தீபமானது ஏற்றப்பட்டது
kanimozhi
Published on: 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி திருப்பரங்குன்ற கல்தூனில் தீபமேற்றப்பட்டதற்கு, மாநில உரிமைகளை எரித்து சாம்பாலாக்கி இருக்கிறது தவெக என்று திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபமேற்றம்

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின்படி,மாலை 5:00 மணியளவில் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய கல்தூணில் (தீபத்தூண்) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மத்திய ரிசர்வ் காவல் படையின் பலத்த பாதுகாப்புடன், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் கோவில் பட்டர்கள் இந்த தீபத்தை ஏற்றினர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

ஆனால், வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை நவம்பர் 27-ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு எச்சரித்து கல்தூணில் தீபமேற்றவேண்டும் என உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு

நவம்பர் 28-ஆம் தேதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால் நின்று பக்தர்கள் வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டது.

கோயில் நிர்வாகத்தைக் கவனித்து, தீபம் ஏற்றும் நிகழ்வை மேற்பார்வையிட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகத் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டிஜிபி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, டிசம்பர் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி கல்தூணில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் முன்னிலையில் தீபமானது ஏற்றப்பட்டது

இந்த நிலையில் தீபமேற்றப்பட்டதற்கு மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு

என்று குறிப்பிட்டுள்ளார்

X