நாளை ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குகிறார் அமைச்சர் ராஜ்மோகன்

இந்த ஆண்டு 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
Minister Rajmohan
Published on
Summary

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார்.

நல்லாசிரியர் விருது

தமிழக அரசு சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது அவரது பிறந்தநாளில் வழங்கப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா நாளை (5-ந்தேதி) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு பள்ளிக்கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வி இயக்குனர் லதா வரவேற்கிறார்.

அமைச்சர் ராஜ்மோகன்

விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார். இந்த ஆண்டு 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. முடிவில் தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் நன்றி கூறுகிறார்.

விழாவில் மேயர் பிரியா, தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக தலைவர் லயோலா மணி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, அருள் பிரகாசம் எம்.எல்.ஏ, மாநிலத் திட்ட இயக்குனர் கலைச்செல்வி, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com