
நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்று தான் கூறினாரே தவிர வேறு தவறாக கூறவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்
நன்றி சொல்ல தகுதியில்லை என தமிமுன் அன்சாரியை பார்த்து எப்படி கூற முடியும்? என அமைச்சர் ஷாஜகானுக்கு கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும்- அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்பு
கலைஞர் மஞ்சள் துண்டு அணிந்தது குறித்து அமைச்சர் ஒருவர் சபையில் பேசியிருந்தார். இடஒதுக்கீடு வழங்கியதற்காக கலைஞர் கருணாநிதிக்கு ராமதாஸ் மஞ்சள் துண்டு அணிவித்தார். பாராட்டு விழா நடத்தி அந்த மேடையிலேயே கலைஞருக்கு மஞ்சள் துண்டு அணிவித்தார் ராமதாஸ். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்.
திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் நன்றி கெட்டத்தனமாக வெளியே வரவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்
திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக காதர் மொய்தீன் கூறினார்- நிர்மல்குமார்
யாரால் வென்றோம் என திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் ஷாஜகான் பேசியதே நன்றி உணர்வுதானே- சபாநாயகர்
எந்த துறை சார்ந்த அமைச்சர் பதலளிக்க வேண்டுமோ அவருக்குத்தான் சட்டசபை விவாதத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்- சபாநாயகர்
தேவையற்ற வார்த்தைகளை பேசாமல் இருந்தால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம்- அமைச்சர் நிர்மல்குமார்
அமைச்சர் ஷாஜகான் குறித்து தமிமுன் அன்சாரி பேசிய பேச்சு அமளி ஏற்பட்டது.
IUML அலுவலகத்துக்கு வந்த முதல் முதலமைச்சர் விஜய் தான். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நல்ல திசை நோக்கி செல்கிறது- அமைச்சர் ஷாஜகான்
ஒரு கையில் குர்ஆனையும் மறு கையில் அரசியலமைப்பை தாங்கிப் பிடியுங்கள் எங்களை வழிநடத்தியவர் காதர் மொய்தீன்- அமைச்சர் ஷாஜகான்
சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றிக்கு உழைத்த முக ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி- சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான்
வன்னியருக்கான உள்இடஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக வன்னியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்- எடப்பாடி பழனிசாமி
வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதாக சிவி சண்முகம் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
10.5% ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என 2021-ல் நடந்த சபையில் தீர்மானம், ஸ்டாலின் உறவினர் வழக்கு தொடர்ந்தார்-சிவி சண்முகம்
வன்னியருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சிவி சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும்- எம்ஆர்கே பன்னீர்செல்வம்
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுக்கு முட்டுக்கட்டை என சிவி சண்முகம் நேற்று பேரவையில் பேசியது தவறு- எம்ஆர்கே பன்னீர்செல்வம்
வன்னியர் இடஒதுக்கீடு- சட்டசபையில் வாக்குவாதம்
வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலினின் உறவினர் வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டனர்-சிவி சண்முகம்
விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர் எங்களை அழைத்து அறிவுறுத்தினார்- அமைச்சர்
கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்- அமைச்சர்
575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராமக்கள் பொருத்தப்பட்டுள்ளன- அமைச்சர் சம்பத்குமார்
மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது, மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி- அமைச்சர்
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர்
விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை- அமைச்சர் சம்பத்குமார்
5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு- அமைச்சர் சம்பத்குமார்
ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்- அமைச்சர் சம்பத்குமார்
திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்- அமைச்சர் சம்பத்குமார்
விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு மு ன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்- அமைச்சர் சம்பத்குமார்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை- கே.என்.நேரு
மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை- அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்து வருகிறார்.
இந்தாண்டு மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- சேகர்பாபு
பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருவதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு நிதிவிடுவிக்கவில்லை- சேகர்பாபு
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை- அமைச்சர் வெங்கட்ரமணன்
கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்க நடவடிக்கை அமைச்சர் வெங்கட்ரமணன்
உணவுத்துறை அமைத்து கண்காணித்து வரும் நிலையில் விலை அதிகமாக உள்ள பொருளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை- அமைச்சர் வெங்கட்ரமணன்
வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம்- அமைச்சர் வெங்கட்ரமணன்
ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால் தான் விலைவாசி பொருட்களும் விலை உயர்ந்துள்ளது- அமைச்சர் வெங்கட்ரமணன்
எரிபொருள் விலை உயரும் நேரத்தில் மளிகை பொருட்கள் பதுக்கல், அதனால் விலை உயர்வு சாதாரணம்- சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி
பண்டிகை காலம் வருவதால் அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும்- சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்
பண்டிகை காலங்களில் மளிகை பொருள் தொகுப்பு தருவதை போல் ரேஷனில் தற்போதும் வழங்க வேண்டும்- தாரகை கத்பட்
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்
வறட்சி காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த அரிசியின் வரத்தும் குறைந்ததால் விலை உயர்வு- எடப்பாடி பழனிசாமி
துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் விலைவாசி உயர்வால மக்கள் அவதி- உதயநிதி ஸ்டாலின்
த.வெ.க. அரசு அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தொடங்கியது சட்டசபை- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை
சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை.