Tamil News Live: விலைவாசி உயர்வு- அமைச்சர் விளக்கம்- 28 ஆகஸ்ட் 2026

சட்டசபையில் இன்று சமூகநீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன், சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலுரை வழங்குகிறார்கள்.
அமைச்சர் வெங்கட்ரமணன்
அமைச்சர் வெங்கட்ரமணன்

ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்- அமைச்சர் சம்பத்குமார்

ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்- அமைச்சர் சம்பத்குமார்

திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்- அமைச்சர் சம்பத்குமார்

விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு மு ன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்- அமைச்சர் சம்பத்குமார்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை- கே.என்.நேரு

மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரை

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை- அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்து வருகிறார்.

இந்தாண்டு மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- சேகர்பாபு

பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருவதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு நிதிவிடுவிக்கவில்லை- சேகர்பாபு

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை- அமைச்சர் வெங்கட்ரமணன்

கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்க நடவடிக்கை அமைச்சர் வெங்கட்ரமணன்

உணவுத்துறை அமைத்து கண்காணித்து வரும் நிலையில் விலை அதிகமாக உள்ள பொருளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை- அமைச்சர் வெங்கட்ரமணன்

வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம்- அமைச்சர் வெங்கட்ரமணன்

ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால் தான் விலைவாசி பொருட்களும் விலை உயர்ந்துள்ளது- அமைச்சர் வெங்கட்ரமணன்

எரிபொருள் விலை உயரும் நேரத்தில் மளிகை பொருட்கள் பதுக்கல், அதனால் விலை உயர்வு சாதாரணம்- சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி

பண்டிகை காலம் வருவதால் அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும்- சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்

பண்டிகை காலங்களில் மளிகை பொருள் தொகுப்பு தருவதை போல் ரேஷனில் தற்போதும் வழங்க வேண்டும்- தாரகை கத்பட்

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்

வறட்சி காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த அரிசியின் வரத்தும் குறைந்ததால் விலை உயர்வு- எடப்பாடி பழனிசாமி

துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் விலைவாசி உயர்வால மக்கள் அவதி- உதயநிதி ஸ்டாலின்

த.வெ.க. அரசு அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

தொடங்கியது சட்டசபை- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை

சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com