GOLD PRICE TODAY: ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் - இன்றைய நிலவரம்

வெள்ளி விலை 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
gold, silver
Published on

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கம் கண்டு வந்து, கடந்த மாதம் (ஜூன்) இறுதியில் விலை மளமளவென சரிந்து வந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை மாற்றம் கண்டது. காலையில் ரூ.2,160 குறைந்து, மாலையில் ரூ.1,360 உயர்ந்தது. 2-வது நாளாக நேற்றும் ஒரே நாளில் இருமுறை விலை மாற்றம் இருந்தது.

அதன்படி, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்திருந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. ஆக மொத்தம் நேற்று முன்தினம் விலையைவிட நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி உயர்வு

இந்நிலையில், சென்னையில் இன்று மாலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,08,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com