

அரசு பணியாளர் தேர்வாணையம் க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் அன்றைய தினமே தொடங்கியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி என்றாலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுவரை குரூப்-4 தேர்வு எழுத 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 5-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படுதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு 5 ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பக்கும் கால அவகாசம் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அகவாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரியில் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். குரூப்-4 தேர்வுக்கான எழுத்து தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.