

அண்ணன் சீர் திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரி உள்ளது.
தமிழகத்தில் திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டு புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இப்போது டெண்டர் கோரி உள்ளது.
ஒரு தங்க நாணயம் 8 கிராம் எடையுடன் 22 கேரட் 916 ஹால்மார்க் தரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுப் புடவையை பொறுத்தவரையில் சில்க் மார்க் மற்றும் ஹேண்டலும் மார்க் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெண்டர் நடைமுறைகள் முடிந்து டிசம்பர் இறுதிக்குள் இவற்றை கொள்முதல் செய்வதற்கான ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள மணப்பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தங்க நாணயமும், பட்டுப்புடவையும் அண்ணன் சீராக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.