ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க புதுக்கோட்டை செல்லும் முதலமைச்சர் விஜய்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on: 

முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (நவ. 2) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு பயனாளிகளுக்கு ரூ. 100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய் கார் மூலம் புதுக்கோடை செல்கிறார்.

புதுக்கோட்டையில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் விஜய் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

புதிய திட்டங்கள் தொடக்கம்:

அதன்படி, புதுக்கோட்டை நகரில் ரூ. 23 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நவீன பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கிறார்.

பின்னர், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் விழாவில் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்.

மேலும், ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பல் நோக்கு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்தும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார். பின்னர், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சர் விஜய் வருகையை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

X