மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

தென்மண்டலக் குழுவின் துணை தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.
Amit shah and Vijay
Published on: 

தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டின் தென்மண்டலக் குழுவின் துணை தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் வருகை தந்தார். நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தந்த அமித் ஷாவை முதலமைச்சர் விஜய் வரவேற்றார்.

முதல் அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று அமித் ஷாவை சந்தித்தார். இரவு நடைபெறும் உணவு விருந்தில் அமித்ஷா மற்றும் விஜய் உள்பட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com