தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர்.. திருமாவளவனுக்கு முதல்வர் வாழ்த்து

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 'மேஜர் ஜெனரல்' எனப் பாராட்டப்பட்டவர்.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்புக்குரிய உடன்பிறப்பு.
தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர்.. திருமாவளவனுக்கு முதல்வர் வாழ்த்து
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்ததில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் 'எழுச்சித் தமிழர்' திருமாவளவன்

அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், " விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் எம்.பி.-ன் பிறந்த நாளான இன்று அவரை நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 'மேஜர் ஜெனரல்' எனப் பாராட்டப்பட்டவர்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்புக்குரிய உடன்பிறப்பு.

சமத்துவம் - சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அன்பு அண்ணன்.

பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மானுட விடுதலைக்காக கொள்கை உரத்தோடுக் களமாடும் அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம். அவரின் பணிகள் சிறக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com