

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் உள்ளவரை திமுக வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்றார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பங்கேற்று பேசினார். அவரது பேச்சின் இறுதியில், அப்பாவை காணும் என்று சொல்கிறார்கள். அவர் இங்கு வரும்போது பாதி பேர் இங்கு இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் இருப்போம் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, எங்கள் முதலமைச்சர் இருக்கும் வரை இனி தமிழ்நாட்டில் உங்களால் தலை தூக்க முடியாது. மீண்டும் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.
உடனே கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், திமுக விழுந்துள்ளது. ஆனால் விழுந்த வேகத்தில் மீண்டும் எழும் அதுதான் திமுக என்றார்.
உடனே செங்கோட்டையன், எம்ஜிஆர் இருந்தவரை திமுக வெற்றி பெறவில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் உள்ளவரை திமுக வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்றார் .
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு:- 1980ல் பாராளுமன்றத்தில் திமுக வெற்றி பெற்றது. 1986 இல் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது.
செங்கோட்டையன் :- 1980ல் நாடாளுமன்றம் சென்றீர்கள்.. ஆட்சியை கலைத்தீர்கள் ஆனாலும் மீண்டும் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தவர் எம்ஜிஆர். என்றார்.