திருவள்ளூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற முக்கிய குற்றவாளி கைது

ஏ.டி.எம்.கொள்ளை தொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற முக்கிய குற்றவாளி கைது
Published on: 

ஏ.டி.எம். கொள்ளையில் மூளையாக செயல்பட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மிஜானூர் ரஹ்மான் முல்லா என்ற ராஜு (47) என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை வெள்ளவேடு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகை பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை கடந்த 2 மாதத்திற்கு முன்பு மர்மநபர்கள் பெயர்த்து எடுத்து தூக்கிசென்று கொள்ளையடித்தனர். அதில் மொத்தம் ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 700 இருந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.டி.எம்.கொள்ளை

இந்த ஏ.டி.எம்.கொள்ளை தொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சமீர் (36), மாசூம் என்ற சர்பார் கான் (49) மற்றும் ரசூல் (34) ஆகிய 3 பேரை கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி ஏற்கனவே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சமீர் மற்றும் மாசூம் ஆகிய இருவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கைது

இந்த ஏ.டி.எம். கொள்ளையில் மூளையாக செயல்பட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மிஜானூர் ரஹ்மான் முல்லா என்ற ராஜு (47) என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை வெள்ளவேடு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தின் உதிரிபாகங்கள் மற்றும் ரூ.29 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மிஜானூர் ரஹ்மான் முல்லாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

X