

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 ஐம்பொன் சிலை, 1 பித்தளை குத்துவிளக்கு மற்றும் ரூ.5,000 ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் உட்கோட்டம், ஊதியூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பங்கம்பாளையத்தில் அமைந்துள்ள பழமையான மாகாளியம்மன்கோவிலின் கதவுகள் கடந்த 30-ந்தேதி அன்று காலை உடைக்கப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகி ராமலிங்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள பழமையான ஐம்பொன் சிலையும பித்தளை குத்துவிளக்கு ஒன்று காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில், ஊதியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல், காங்கேயம் உட்கோட்டம், ஊதியூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட எல்லப்பாளையம் என். காஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள புது நாட்ராய சுவாமி கோவிலிலும் உண்டியலில் இருந்த சுமார் ரூ.30,000 பணமும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்தும் கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில், ஊதியூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த இரண்டு திருட்டு வழக்குகளையும் விரைவாக விசாரிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டிசிங், உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவா ளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய முத்துச்செல்வன் (33), சஞ்சை (21), தங்கபாண்டி(40), கார்த்திக் (35), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 ஐம்பொன் சிலை, 1 பித்தளை குத்துவிளக்கு மற்றும் ரூ.5,000 ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.