இது தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி: திருமாவளவன்

மதவாத, சாதிவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்றார்.
thirumavalavan
Published on
Summary

இது தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதை அடுத்து, கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டது.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

மதவாத, சாதிவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை.

மதச்சார்பின்மையை அகில இந்திய அளவில் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.

அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி

இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியின் பெயரை ஒருமனதாகத் தேர்வு செய்தோம் என்றார்.

தவெக தலைமையில் கூட்டணி

ஐயூஎம் எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறுகையில், தமிழகத்தில் முதன் முறையாக தவெக ஆட்சியில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என இனி வரும் காலங்களில் தவெக தலைமையில் கூட்டணி தொடரும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி இன்றும், என்றும் தொடரும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com