

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய தி.மு.க. அரசு எடுத்த நிலைப்பாடு காரணமாகத்தான் ஆட்சியை இழந்தார்கள். ஆனால் எப்படியோ 5 ஆண்டுகள் தி.மு.க ஆட்சியை நடத்தியது. ஆனால் த.வெ.க 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவது வாய்ப்பில்லை.
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க மிகவும் பின்தங்கி உள்ளது. முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. முதல்வருக்கு சட்ட மன்றத்திலும் பேசத் தெரியவில்லை, பிரசாரத்திலும் பேசத் தெரியவில்லை. பிரசாரத்தில் மாற்றி மாற்றி பேசி வருகிறார். த.வெ.க.வை தி.மு.க என்கிறார். பா.ஜ.க.வை தி.மு.க. என்கிறார். என்ன சொல்லப் போகிறார் என்றே தெரியவில்லை.
இந்தியா கூட்டணியில் தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகள் இருந்தன. இப்போது தி.மு.க அதில் இல்லை. த.வெ.க எவ்வளவு நாள் இந்த கூட்டணியில் இருக்கப் போகிறது என்பதும் தெரியவில்லை. உருவகேலி செய்து ஒருவரை பேசுவது மிகவும் தவறு. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் எவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை. அவர் ஒருவேளை உருவ கேலி செய்யும் நோக்கத்தில் பேசினால் அது தவறு.
காங்கிரஸ் தோல்வி அடைந்தால் வாக்கு எந்திரம் குறித்து ஒரு செய்தியும், வெற்றி பெற்றால் ஒரு செய்தியும் சொல்வது மிகவும் தவறு. எஸ்.ஐ.ஆர். நீக்கம் கொளத்தூர் தொகுதியில் நடந்தபோது தி.மு.க எந்தக் குறையும் சொல்லவில்லை. ராகுல் காந்தி பொய்யாகவே எல்லாம் சொல்லி வருகிறார். எஸ்.ஐ.ஆர். வரப்போய்தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி த.வெ.க. ஆட்சி அமைத்தது. அதனை தொடர்ந்து இப்போதும் மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் த.வெ.க.வினர் பொய்யாக சொல்லி வருகின்றனர். சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மிகப்பெரிய பிரச்சினைகள் நாளடைவில் வரும். தண்ணீருக்காகத்தான் உலகப்போர் வரும் என்று சொல்வார்கள். ஆனால் சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்சினை வரும். சின்ன குழந்தைகளை எல்லாம் கவர் சமூக வலைதளத்தை த.வெ.க பயன்படுத்தியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய தி.மு.க. அரசு எடுத்த நிலைப்பாடு காரணமாகத்தான் ஆட்சியை இழந்தார்கள். ஆனால் எப்படியோ 5 ஆண்டுகள் தி.மு.க ஆட்சியை நடத்தியது. ஆனால் த.வெ.க 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவது வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.