

செங்கல்பட்டில் அதிமுக 55-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தவெக ஆட்சி அமைந்த இந்த 6 மாதத்தில் மக்களுக்கு கிடைத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியில் அரிசு, பருப்பு என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
தனது சொத்தை மக்களுக்காக கொடுத்தவர் எம்ஜிஆர், தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா.
தவெக ஆட்சியில் ஊழல் இல்லையா? திமுக ஆட்சியில் அரசு அலுவலகங்களில் ரூ.5000 லஞ்சம் வாங்கினார்கள். இப்போது, ரூ.10,000 வாங்கப்படுகிறது.
எந்த ஒரு அலுவலகத்திற்கு சென்றாலும் லஞ்சம் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது.
விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வாங்கினாராம். இப்போது அதை விட்டுவிட்டு வந்தாராம்? யார் வரச்சொன்னது?
ரூ.200 கோடியை விட அதிகமாக கிடைக்கும் என நினைத்துதான் படத்தின் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.
பிற கட்சிகளைபோல் இல்லாமல் மக்களுக்காக தொடங்கப்பட்ட ஒரே கட்சி அதிமுக.
அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூடு உச்சபட்ச அதிகாரத்தில் அமர முடியும். நீங்களும் ஒன்று தான் நானும் ஒன்று தான்.
மனிதனாகப் பிறந்தால் தன்மானமுடன் இருக்க வேண்டும். அதிமுகவில் இருக்கும் அனைவரும் தன்மானம் மிக்கவர்கள்.
சிலர் வேடந்தாங்கல் பறவைகளைப்போல் சீசனுக்கு ஏற்றாற்போல் கட்சி மாறுவர்கள். அவர்களைப்பற்றி கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.