3 மாதங்களாக தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய்: தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்!- தங்கம் தென்னரசு

வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்!
தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு
Published on: 
Summary

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 3 மாதங்களாக குறைவது மாநிலத்தின் பொருளாதார செயல்பாடுகள் குறைவதைக் காட்டுகிறது. தவெக அரசு இதற்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது, அதன் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாகும். எனவே, மாநிலத்திற்குள் நடைபெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைகள் தொடர்ந்து குறைவது குறித்தும், உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இதனால் முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

சரிவு

வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் இந்தச் சரிவு தொடர்கிறது. ஆனால், உண்மையான பொருளாதார நிலையைப் பேசாமல் 'Post Settlementக்குப் பிறகு 17% உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கை மட்டும் முன்வைத்து சமூக வலைதளங்களில் பல காணொளிகளைக் கொண்டு சிலர் இதை நியாயப்படுத்தி வருகின்றனர்.

17% பிந்தைய வருவாய் உயர்வைக் காட்டிக் குழப்புவது உண்மையை மறைக்காது. மாநிலத்திற்குள் வரி வசூல் ஏன் தொடர்ந்து குறைகிறது என்பதற்கு பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் பொருட்கள் மீதான IGST வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல!

வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com