டாஸ்மாக் ஊழியரை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

மணிகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
கைதான மணிகண்டன்
Published on: 

காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சம்பவத்தன்று மணிகண்டன் (வயது 35) என்பவர் மது வாங்க சென்றுள்ளார். மதுபானம் வாங்கிக்கொண்டு வெறும் ரூ.150 மட்டும் கொடுத்த அவர், தான் ரூ.500 கொடுத்ததாகக்கூறி மீதி சில்லறை கேட்டு அங்குள்ள ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கத்தி

தொடர்ந்து, தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி, ஊழியர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டிய மணிகண்டன், அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

டாஸ்மாக் ஊழியர்கள்

இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு அறிவுறுத்தலின்படி, சப்-இன்ஸ்பெக்டர் சையத் அப்சல் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கைது

இந்நிலையில், மணிகண்டன் தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு

பின்னர் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com