பிரதமரை வரவேற்கும் ஓ.பி.எஸ். - பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுகிறாரா?

ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். வரவேற்கும் குழுவில் இருப்போர் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரை வரவேற்கும் ஓ.பி.எஸ். - பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுகிறாரா?
Published on

சென்னை:

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் இன்று சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றது.

அப்பட்டியலில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

வரவேற்கும் குழுவில் இருப்போர் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் திருச்சிக்கு பிரதமர் வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரை வரவேற்று வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com