தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது

ஆலோசனை கூட்டத்தில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது
Published on

சென்னை:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் துணைச் செயலாளர்கள் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை அன்பகம், அண்ணா மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடுதல், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com