தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

27 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கவலையை அளிக்கிறது.மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை:

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கவலையை அளிக்கிறது.

தொடர்ச்சியாக இது போன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com