ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவ் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவ் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை:

ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச்சென்றுள்ளார்.

இத்துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com