பெண்களை போல் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் சலுகை வேண்டும்

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெண்களை போல் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் சலுகை வேண்டும்
Published on

சென்னை:

காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரிசி விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் தற்போது 3500 பஸ்கள் இருக்கும் நிலையில் அதை 8000 பஸ்களாக உயர்த்த வேண்டும்.

பெண்களுக்கு இலவச பஸ் சலுகை வழங்கப்படுவது போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவச பஸ் சலுகை கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாக வாய்ப்புள்ள மற்ற இடங்களில் இதனை விரிவுபடுத்த வேண்டும். அப்போது தான் பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன் படுத்துவார்கள்.

மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் இறக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com