150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு

திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது.
Minister Vanni arasu
Published on

தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.

மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அதன் விவரம் வருமாறு:-

ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்

ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்

ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்

கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்

திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்

எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும். 150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம்.

வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு

அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு

கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு

புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்

கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்

ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு சட்டசபையின் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் - எ.வ.வேலு

எந்த கட்சி, சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள் என்ற அடிப்படையில் தான் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு- சபாநாயகர்

எ.வ.வேலு கேட்டுக்கொண்டதன்படி மூத்த உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் இடம் தருவது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் - சபாநாயகர்

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com