ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்- புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்

பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
TN CM Vijay
Published on

காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார்.

அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

அதன் விவரம்:-

காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.

போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.

ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்.

பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியகத்தில் உள்விளையாட்டு அரங்கு, விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com