மேக் இன் இந்தியா திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சி கண்டு வருகிறது- பிரதமர் மோடி

முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பயணித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கிறோம்.
PM Modi
Published on: 

ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜயும் இணைந்து ரூ.13,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை, ரெயில்வே, துறைமுகம் சார்ந்த திட்டங்கள் தொடங்கி வைக்கை்ைதேசிய பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

காரைக்கால்-பேரளம் இடையே 23 கிலோ மீட்டர் தூரத்துக்கான புதிய ரெயில்பாதை தொடங்கி வைக்கப்பட்டது.

சீரமைக்கப்பட்ட பழனி, வேலூர் கன்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

அம்ரித் பாரத் ரெயில் நிலையத்திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி, முதலமைச்சர் திறந்து வைத்தனர்.

ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பின்னர் உரையாற்றினார்.

அப்போது, தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

அவர் கூறியதாவது:-

ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்ட இன்றைய நாள் தமிழ்நாட்டிற்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள்.

சென்னையில் தமிழ் மக்களுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அன்றாட பயணத்தை எளிதாக்கும், தொழில்துறையை மேம்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தொடக்கம்.

நவராத்திரியின் முதல் நாளில் பவித்திரமான பூமியான தமிழ்நாட்டில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தது எனது பாக்கியம்.

புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் இருந்து நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சென்னை ஐஐடி மூளை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் ஆய்வுகள் பொது சுகாதரத்துறையில் வாய்ப்புகளை உருவாக்கும்.

பாரதம் தனது கலாச்சார சக்திகளில் இருந்து உத்வேகம் பெறுகிறது, அறிவியல் வளர்ச்சியால் வாய்ப்புகளை பெறுக்குகிறது.

சில நாட்களுக்கு முன்னதாக எனது அரசுியல் பயணம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது உங்கள் அன்பால் சாத்தியம்.

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை கலைஞர், ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

பிரதமரான பின்னர் ஸ்டாலின், இபிஎஸ், பன்னீர் செல்வத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து.

அதே வரிசையில் முதலமைச்சர் விஜயுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பயணித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கிறோம்.

சிறப்பான போக்குவரத்துக்கு சாலைகளை விரிவுபடுத்துவது மட்டும் போதாது, அதனால் தான் மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம்.

2014-ல் 5 நகரங்களில் மட்டுமே இருந்த மெட்ரோ ரெயில் சேவை இப்போது 25 நகரங்களில் விரிவாக்கம்.

2014-ல் 250 கி.மீ இருந்த மெட்ரோ ரெயில் சேவை இப்போது 1,100 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பொருட்களின் உற்பத்தியை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சி மிகவும் முக்கியமானது, மாநிலத்தின் சக்தி அதிகரித்தால் தேசத்தின் சக்தி அதிகரிக்கும்.

உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். மேக் இன் இந்தியா திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சி கண்டு வருகிறது.

மொபைல் உற்பத்தியில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உற்பத்தித்துறையில் நாடு முன்னேறி வருவதால் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

பலமான உற்பத்தித்துறையை உருவாக்க சரியான சாலை வசதி தேவை, ரெயில்வே, துறைமுகங்கள் தேவை. பலமான உற்பத்தி துறையை உருவாக்கும்போது பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாகிறது.

உற்பத்தித்துறையில் நாடு முன்னேறி வருவதால் லட்சக்ணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கட்டுமானம் என்றால் பொறியாளர்கள், வல்லுநர்கள், தொழிலாளர்கள், ஆலைகள், சிறு நிறுவனங்களுக்கு வேலை கிடைக்கிறது.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com