ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

வீட்டில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் திருடுபோனது.
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
Published on: 
Summary

வீட்டில் வேலைபார்த்து வந்த ராஜேஸ்வரியிடம் விசாரித்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகையை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜேஸ்வரிைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகுமார். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர்களது வீட்டில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் திருடுபோனது. இதுகுறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

இதில் வீட்டில் வேலைபார்த்து வந்த ராஜேஸ்வரியிடம் விசாரித்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகையை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜேஸ்வரிைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X