கரூர் பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில் ‘திடீர்' திருப்பம்: பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அம்பலம்

தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள நெய் கம்பெனியில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
கொலை
கொலை
Published on
Summary

கரூர் வெங்கமேடு பிளஸ்-2 மாணவி தர்ஷினி மாயம் வழக்கு பாலியல் வன்கொடுமை, கொலை என அதிர்ச்சித் திருப்பம் பெற்றுள்ளது. வினோதினியுடன் காதலில் இருந்த மோகன்ராஜ், ஆகஸ்ட் 17-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த தர்ஷினியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது எதிர்த்ததால் கத்தியால் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்து கொலை செய்து உடலை முட்புதரில் வீசியது விசாரணையில் வெளிப்பட்டது.

கரூர் வெங்கமேடு திட்டசாலை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள்கள் வினோதினி (வயது 21), தர்ஷினி (வயது 17). வினோதினி கரூர் வெங்கமேட்டில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். தர்ஷினி கரூரில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மாயம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி தர்ஷினி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கீதா அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில், வினோதினியுடன் பழகி வந்த கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (32) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்ஷினியை அடித்துக்கொலை செய்து உடலை கரூர் வெங்கமேட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வீசியதாக கூறினார்.

மோகன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோகன்ராஜ் வாக்குமூலம் அளிக்கும் போது, தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள நெய் கம்பெனியில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

வினோதினியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிவித்த அவர்,கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வினோதினியை சந்திக்க வெங்கமேட்டில் உள்ள வீட்டுக்கு சென்றபோது, தர்ஷினி வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியதால் ஆத்திரமடைந்து தாக்கியதில் அவர் இறந்ததாகவும், பின்னர் வினோதினி உதவியுடன் தர்ஷினியின் உடலை வெங்கமேடு-வாங்கல் புது சாலையோரம் உள்ள முட்புதரில் வீசி விட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.

கற்பழித்து கொலை

இந்தநிலையில் நேற்று மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தர்ஷினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

கடந்த ஆகஸ்டு 17-ந்தேதி வினோதினி வீட்டுக்கு மோகன்ராஜ் சென்றபோது வீட்டில் தர்ஷினி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கத்தியால் தர்ஷினியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் தர்ஷினி மயக்கமடையவே, அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கழுத்தை கத்தியால் அறுத்துக்கொலை செய்துள்ளார். பின்னர் ஆட்டோவில் உடலை ஏற்றிச்சென்று வாய்க்கால் புதருக்குள் வீசியதாகவும், உடலை வீசும்போது கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை வீசியதாகவும் மோகன்ராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

தப்ப முயன்ற போது காயம்

இதையடுத்து, அந்த கத்தியை எடுப்பதற்காக மோகன்ராஜை போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். போலீசார் அவரை விரட்டியபோது கீழே விழுந்ததில் காயமடைந்தார். தொடர்ந்து, மோகன்ராஜ் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com