கல்வி உதவித்தொகை கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி - மாணவர் பாரதிதாசன்

வெளிநாட்டில் படிப்பதற்காக கல்வி உதவித்தொகை தனக்கு வழங்கப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.
student bharathidasan
Published on: 
Summary

கல்வி உதவித்தொகை கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி என்று மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டார்.

மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவர் பாரதிதாசன். வெளிநாட்டில் படிப்பதற்காக கல்வி உதவித் தொகை தனக்கு வழங்கப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில் பாரதிதாசன், கல்லூரியில் இருந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அமைச்சர் வன்னி அரசு, பாரதிதாசன் என்னுடைய தம்பி.. அவருக்கான கல்வி உதவித்தொகை 2 நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை பாரதிதாசன் கைகளுக்கு சென்று சேர்ந்து உள்ளது. இதை தொடர்ந்து மாணவர் பாரதிதாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2-ம் ஆண்டுக்கான ஆய்வு மற்றும் அன்றாட செலவுக்கான உதவித்தொகை கிடைத்து விட்டது. இதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இதற்காக முயற்சித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com