திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரபரப்பு: அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் இடையே வாக்குவாதம்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
Annamalaiyar Temple
Published on: 
Summary

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை உலக புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் வருகிற நவம்பர் 15-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயிலில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது செய்தியாளர்களை பின்தொடர வேண்டாம் என்றும், கோயிலுக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

ஆய்வுப் பணிகளுக்காக அமைச்சர்கள் மட்டும் செல்வதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்களுடன் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாகப் பத்திரிகையாளர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, அமைச்சர்களுடன் வந்திருந்த உதவியாளர் ஒருவர் இஸ்லாமிய மத அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான தொப்பியை அணிந்தபடி கோயிலுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த கோயில் நிர்வாகிகளும் சில தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கோயிலுக்குள் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் வழிபாடு செய்ய வரலாம்; ஆனால், மாற்று மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளோ அல்லது தொப்பிகளோ அணிந்து கொண்டு கொடிமரத்தைத் தாண்டி செல்வது முறையல்ல என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்தச் சம்பவத்தால் கோயில் வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com