சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்து

தமிழ் நாட்டின் ஜி.சி.சி. வளர்ச்சிப் பயணத்தில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.
சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்து
Published on
Summary

உலகளாவிய திறன் மைய துறையில் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், தமிழ் நாட்டின் ஜி.சி.சி. வளர்ச்சிப் பயணத்தில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில், 2 உலகளாவிய திறன் மையத்தை நிறுவ முன்வந்துள்ளது.

இந்த நிறுவனம், இந்தியாவில் முதல்முறையாக, தமிழ் நாட்டில் தனது உலகளாவிய திறன் மையத்தை நிறுவ முன்வந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் முன்னிலையில்

இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், உலகளாவிய திறன் மைய துறையில் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், தமிழ் நாட்டின் ஜி.சி.சி. வளர்ச்சிப் பயணத்தில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாடு ஒரு சிறந்த இடம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னர் முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-

ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் தனது உலகளாவிய மையத்தை சென்னையில் அமைப்பது எங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. உலகப் புகழ்பெற்ற இத்தகைய பெரிய நிறுவனம் நமது மாநிலத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை, நமது இளைஞர்களின் திறமைக்குக் கிடைத்த சான்றாகும்.

முதலீடு

இந்த முதலீடு, இது போன்ற உயர் நிறுவனங்கள் வருவதற்குத் தமிழ்நாடு ஒரு சிறந்த இடம் என்பதை நிரூபிக்கும். தமிழ்நாட்டிலுள்ள திறமையான இளைஞர்களுக்குப் பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்துடனான இப்பயணம் நீண்ட காலம் வெற்றிகரமாகத் தொடர தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம்

ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப அலுவலர் ஆனந்த் வரதராஜன், இந்தியாவை நாங்கள் மிகவும் முக்கியமான நாடாகக் கருதுவதாகவும், சென்னையில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏராளமாக உள்ள நிலையில், இவ்வல்லுநர்கள் பணியில் சேரும் நிறுவனங்களில் நீண்ட காலம் பணியில் தொடர்வதும், தமிழ்நாட்டிலுள்ள சிறந்த உட்கட்டமைப்பும், தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கமும், புதிய தீர்வுகளைக் காணவும், வணிகத்தை வளர்க்கவும் உதவும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் கீர்த்தனா

நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றம் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப அலுவலர் ஆனந்த் வரதராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com