கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கோவில்
Published on: 
Summary

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள உள்ளனர். இதற்காக 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழா முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து செல்வார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது. இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சணக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

சிறப்பு பஸ்கள்

இந்நிலையில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நெல்லை நிர்வாக இயக்குநர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (14-ந்தேதி) மற்றும் 15,16-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நெல்லை சார்பாக தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி, நாகர்கோவில், உடன்குடி மற்றும் திசையன்விளை ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X