வந்தே பாரத், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் தாமதம்: தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு!

தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்கனூர் சென்றடையும்.
ரெயில்
ரெயில்
Published on
Summary

எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20665), 20 நிமிடம் தாமதமாக நெல்லை சென்றடையும்.

* எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும்.

* தாம்பரத்தில் இருந்து இன்று (3-ந்தேதி) மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06109), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.

* தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்கனூர் சென்றடையும்.

* புதுச்சேரியில் இருந்து நாளை (4-ந்தேதி) மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17654), 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா சென்றடையும்.

* புதுச்சேரியில் இருந்து வருகிற 6-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (16112), 30 நிமிடம் தாமதமாக திருப்பதி சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com