குருவாயூர்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் 16-ந்தேதி எர்ணாகுளம், சேர்தலா ஆலப்புழா, அம்பலப்புழா, ஹரிபாத் வழியாக இயக்கப்படுகிறது.
ரெயில்
ரெயில்
Published on: 
Summary

ரெயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி திருச்சி, பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் டிவிஷன் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பகுதி சேவை ரத்து

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 9.30 மணிக்கு பாலக்காடு புறப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் எண்-22651 9-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பாலக்காடு டவுன் மற்றும் பாலக்காடு ஜங்ஷன் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

இதே போல பாலக்காடு ஜங்ஷனில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் எண்-22652 10-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை பாலக்காடு ஜங்ஷன் மற்றும் பாலக்காடு டவுன் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இரவு 11.10 மணிக்கு எழும்பூர்-மங்களூர் சென்ட்ரல் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் 6-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய இரு நாட்களும் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது. பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் நிலையங்கள் செல்லாது.

குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் 16-ந்தேதி எர்ணாகுளம், சேர்தலா ஆலப்புழா, அம்பலப்புழா, ஹரிபாத் வழியாக இயக்கப்படுகிறது.

ஆலப்புழா-தன் பாத் எக்ஸ்பிரஸ் நாளை 4-ந் தேதி, 7 மற்றும் 8-ந்தேதிகளில் போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படுகிறது.

தாமதமாக புறப்படும்

எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் 14-ந் தேதி காலை 10.40 மணிக்கு புறப்படும். 75 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

கொல்லம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் 9-ந்தேதி மற்றும் 16-ந்தேதி மாலை 6.45மணிக்கு புறப்படும் 35 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றடையும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com